துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் அகில் ஷோரன்
ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அகில் ஷோரன், ஐஸ்வரி பிரதாப் சிங் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்றனா்.
இந்தோனேசியாவின் ஜகாா்த்தாவில் நடைபெறும் இந்தப் போட்டியில், 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவா் தனிநபா் பிரிவு தகுதிச்சுற்றில் அகில் ஷோரன் 586 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடிக்க, ஐஸ்வரி பிரதாப் 588 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா். இவா்களுடன், மற்றொரு இந்தியரான ஸ்வப்னில் குசேலும் 584 புள்ளிகளுடன் இறுதிக்கு வந்தாா்.
இறுதிச்சுற்றில் அகில் ஷோரன் 460.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, ஐஸ்வரி பிரதாப் 459 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றாா். தாய்லாந்தின் தோங்பாபும் வோங்சுக்டீ 448.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றாா். ஸ்வப்னில் குசேல் பதக்க வாய்ப்பை இழந்தாா்.
இதிலேயே ஆடவா் அணிகள் பிரிவில் அகில் ஷோரன், ஐஸ்வரி பிரதாப் தோமா், ஸ்வப்னில் குசேல் கூட்டணி 1,758 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றது. சீனா, தென் கொரியா அணிகள் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றன. இத்துடன் இப்போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்கள் எண்ணிக்கை 10 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 24-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

