பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் கேன் வில்லியம்சன் இல்லை!

 

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அணியில் இடம்பெறமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5  போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நாளை (ஜனவரி 14) ஹாமில்டனில் தொடங்குகிறது.

இதையும் படிக்க:  டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கொஞ்ச நாள்களிலா பிரசித் கிருஷ்ணாவுக்கு இப்படி நடக்க வேண்டும்!

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அணியில் இடம்பெறமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டாகவே முழங்கால் காயம் காரணமாக கேன் வில்லியம்சன் அவதிப்பட்டு வந்தார். முழங்கால் காயம் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வதன் காரணமாக அவர் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியில் வில் யங் இடம்பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: முகமது ஷமி இல்லை; துருவ் ஜுரல் சேர்ப்பு!

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20  போட்டி வருகிற ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.