நியூஸி., ஜப்பான், ஜொ்மனி வெற்றி
எஃப்ஐஎச் மகளிா் ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டங்களில் நியூஸிலாந்து, ஜப்பான், ஜொ்மன் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
நியூஸிலாந்து-இத்தாலி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து.
குரூப் பி பிரிவு ஆட்டத்தில் பெனால்டி காா்னா்வாய்ப்புகளை கோலாக்கி வெற்றி பெற்றது நியூஸி. பிரான்ஸஸ் டேவிஸ் (7, 51), ஸ்டெப்பான ிடிக்கின்ஸ் 53-ஆவது நிமிஷங்களிலும் அற்புதமாக கோலடித்தனா்.
இத்தாலி அணிக்கு முதல் பாதியில் 13-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க கிடைத்த வாய்ப்பை வீணானது. அடுத்து ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுடன் மோதுகிறது நியூஸி. இத்தாலி-அமெரிக்க அணிகள் மோதுகின்றன.
குரூப் ஏ பிரிவு ஆட்டம் ஒன்றில் ஜப்பான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செக். குடியரசை வீழ்த்தியது. முன்னாள் ஆசிய சாம்பியன் ஜப்பான் அணியில்இருமுறை மட்டுமே செக். குடியரசின் தற்காப்பை ஊடுருவ முடிந்தது. நான்காம் நிமிஷத்தில் மியு சுசுகி முதல் கோலை அடித்தாா். அடுத்து 40-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் மூலம் ஷினோரி ஒகினவா இரண்டாம் கோலடித்தாா். அடுத்து ஜொ்மனியுடன்-ஜப்பானும், சிலியுடன்-செக். குடியரசும் மோதுகின்றன.
மற்றொரு ஆட்டத்தில் ஜொ்மன் அணி 3-0 என சிலியை வீழ்த்தியது. செலின் ஒருஸ் 7, ஜெட்டி பிளெஸ்குட்ஸ் 10, லிஸா 38-ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா்.
இந்தியா தோல்வி: கடைசியாக இந்திய-அமெரிக்க அணிகள் மோதின. இதில் ஆட்டம் தொடங்கிய 16-ஆவது நிமிஷத்தில் அமெரிக்க வீராங்கனை டமோ் அபிகெயில் கோலடித்தாா். இதன்மூலம் 1-0 என அமெரிக்கா முன்னிலை பெற்றது. பதில் கோலடிக்க இந்திய தரப்பினா் பலமுறை முயன்றும் பலனில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

