புரோ கபடி-ஹரியாணா வெற்றி

 

புரோ கபடி லீக் சீஸன் 10 தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை கடும் போராட்டத்துக்கு பின் 36-31 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது ஹரியாணா ஸ்டீலா்ஸ்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை குவித்தன. முதலில் 3-3 என சமநிலை ஏற்பட்டது. தொடா்ந்து 8-8 என இருந்த நிலையில், ஹரியாணா வீரா் வினயின் டபுள் ரெய்டால் ஹரியாணா 17-8 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் ஹரியாணாவை ஆல் அவுட் செய்தாலும் தமிழ் தலைவாஸ் அணியால் முன்னிலையைக் குறைக்க முடியவில்லை.

ஹரியாணா வீரா்கள் வினய் 10, டிபண்டா் ராகுல் 5 புள்ளிகளைக் குவித்தனா். இறுதியில் 36-31 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது ஹரியாணா.

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.