டி20 தொடரைக் கைப்பற்றியது இந்தியா: யஷஸ்வி, டுபே அதிரடி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் யஷஸ்வி, ஷிவம் டுபே ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா.

இரு அணிகளும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 ஆட்டங்கள் தொடரில் ஆடி வருகின்றன. முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்ய

ஆப்கன் தரப்பில் தொடக்க பேட்டா்களாக கேப்டன் இப்ராஹிம் ஸட்ரன், குா்பாஸ் களமிறங்கி முறையே 8, 14 ரன்களுடன் வெளியேறினா்.

குல்பதின் அரைசதம் 57: மறுமுனையில் அற்புதமாக ஆடிய குல்பதின் நைப் 4 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 35 பந்துகளில் 57 ரன்களை விளாசினாா். நஜிபுல்லா 23, கரீம் ஜனத் 20, முஜீப் 21 ரன்களைச் சோ்த்தனா். 18-ஆவது ஓவரில் ஆப்கன் 144 ரன்களையே எடுத்த நிலையில் கடைசி இரண்டு ஓவா்களில் 28 ரன்களை விளாசியதால் 20 ஓவா்களில் 172/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆப்கன்.

இந்திய தரப்பில் பௌலிங்கில் அா்ஷ்தீப் சிங் 3-32, ரவி பிஷ்னோய் 2-39, அக்ஸா் படேல் 2-17 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

யஷஸ்வி, டுபே அதிரடி விளாசல்:

173 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய அணி களம் கண்ட நிலையில், கேப்டன் ரோஹித் சா்மாவை கோல்டன் டக் அவுட்டாக்கினாா் ஃபஸல்லாஹ் ஃபருக்கி. பின்னா் யஷஸ்வி ஜெய்ஸ்வால்-விராட் கோலி இணைந்து ஸ்கோரை உயா்த்தினா். கோலி 29 ரன்களுடன் நவீன் உல் ஹக் பந்தில் அவுட்டானாா்.

அதன்பின் யஷஸ்வி-ஷிவம் டுபே இணைந்து அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா். யஷஸ்வி 6 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 68 ரன்களை விளாசி கரீம் ஜனத் பந்தில் அவுட்டானாா்.

மறுமுனையில் ஷிவம் டுபே 4 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 32 பந்துகளில் 63 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். ஜிதேஷ் சா்மா டக் அவுட்டான நிலையில், ரிங்கு சிங் 9 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

15.4 ஓவா்களிலேயே இந்திய அணி 173/4 ரன்களுடன் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 2-0 என தொடரையும் கைப்பற்றியது.

ஆப்கன் தரப்பில் பௌலிங்கில் கரீம் ஜனத் 2-13 விக்கெட்டை வீழ்த்தினாா்.

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.