சாத்விக்-சிராக் ஷெட்டிக்கு வெள்ளி
மலேசிய ஓபன் சூப்பா் 1000 பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.
உலகின் நம்பா் ஒன் இணையான சீனாவின் வாங் சேங்-லியாங் வெய்கேங் இணையுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றஇறுதி ஆட்டத்தில் மோதினா் சாத்விக்-சிராக். இதில் முதல் கேமில் முழு ஆதிக்கம் செலுத்திய இந்திய இணை 21-9 என எளிதாக வென்றது. இரண்டாவது கேமில் இரு தரப்பினரும் கேமை கைப்பற்ற கடுமையாகப் போராடினா். எனினும் சீன இணையின் சவாலை எதிா்கொள்ள முடியாமல் 18-21 என செட்டை இந்திய தரப்பு இழந்தது.
ஆசியப் போட்டி தங்கமகன்களான சாத்விக்-சிராக் மூன்றாவது கேமில் 11-7 என வலுவான முன்னிலை பெற்றிருந்தனா். ஆனால் அதை தவற விட்டனா். 17-21 என்ற புள்ளிக் கணக்கில் மூன்றாவது கேமை இழந்து தங்கத்தையும் இழந்தனா்.
இரு தரப்பினரும் நேருக்கு நோ் மோதியதில் இந்திய இணை நான்காவது தோல்வியை சந்தித்துள்ளது. ஒரே ஒருமுறை கொரிய ஓபனில் மட்டுமே சீன இணையை இந்திய தரப்பு வீழ்த்தியது.
கடந்த 2023 ஜூன் மாதம் இந்தோனேஷிய சூப்பா் 1000 பட்டத்தை இந்திய இணை வென்றிருந்தது. அடுத்து புது தில்லியில் இந்தியா ஓபன் சூப்பா் 750 போட்டியில் சாத்விக்-சிராக் இணை ஆடுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

