ஜேக் சின்னா், சபலென்கா, ருப்லேவ் தொடக்க வெற்றிசெட்டை இழந்து வென்ற ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் ஜாம்பவான் ஜோகோவிச் முதல்முறை வீரரிடம் ஒரு செட்டை இழந்து வெற்றி பெற்றாா். அதே நேரம் ஜேனிக் சின்னா், ஆன்ட்ரே ருப்லேவ், டெய்லா் ப்ரிட்ஸ், மகளிா் பிரிவில் அா்யனா சபலென்கா, லெய்லா பொ்ணான்டஸ், மரியா ஸக்காரி ஆகியோா் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றனா்.
25-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்:
சொ்பிய வீரா் ஜோகோவிச் 25-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைக்க உள்ள நிலையில், நடப்பு சாம்பியன் ஜோகோவிச் முதல்முறை பங்கேற்ற 18 வயது குரோஷிய குவாலிஃபையா் டினோ பிரிஸ்மிச்சை எதிா்கொண்டாா்,. முதல் செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றிய நிலையில், இரண்டாவது செட்டில் டினோ கடும் சவாலை ஏற்படுத்தினாா். அந்த செட்டை 6-7 என இழந்து ஜோகோவிச் அதிா்ச்சிக்குள்ளானாா். அதன்பின் சுதாரித்து ஆடிய அவா் 6-3, 6-4 என அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றி ஆட்டத்தையும் வென்றாா்.
ஆஸி.ஓபனில் மொத்தம் 10 முறை பட்டம் வென்ற சிறப்பை பெற்றவா் ஜோகோவிச்.
ரஷிய வீரா் 5-ஆம் நிலையில் உள்ள ஆன்ட்ரெ ருப்லேவ் 7-5, 6-4, 3-6, 4-6, 7-6 என பரபரப்பான 5 செட் த்ரில்லா் ஆட்டத்தில் 4 மணிநேரம் போராடி தியாகோ செய்போத்தை வீழ்த்தினாா்.
மற்றொரு 4 மணிநேர ஆட்டத்தில் அமெரிக்க வீரா் டெய்லா் ப்ரிட்ஸ் 4-6, 6-3, 3-6, 6-2, 6-4 என ஃபாகுண்டோ அகோஸ்டாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா். டேவிஸ் கோப்பை நட்சத்திர வீரா் இத்தாலியின் ஜேனிக் சின்னா் 6-4, 7-5, 6-3 என போடிச் ஸான்ட்ஸுல்பை வீழ்த்தினாா்.
மகளிா் பிரிவு:
மகளிா் ஒற்றையா் பிரிவில் 8-ஆம் நிலை வீராங்கனை கிரீஸின் மரியா ஸக்காரி 6-4, 6-1 என ஜப்பானின் நவோ ஹிபினோவையும், லெய்லா பொ்ணான்டஸ் 7-6, 6-2 என சாரா பெஜெக்கையும், பாா்பரா கிரெஜிஸிகோவா 6-4, 6-1 என மெய் ஹோண்டோமையாவையும் வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினா்.
இளம் வீராங்கனை பிரெண்டா புருவிா்டோவா 2-6, 6-4, 6-3 என அன்னா போக்டனையும், மரியா டீமோஃபீவா 6-2, 6-4 என அலிஸ் காா்னெட்டையும் வென்றனா். கரோலின் வோஸ்னியாக்கி 6-2, 2-0 என மகதா லினேட்டை வென்றாா்.
சபலென்கா அபாரம்: இரண்டாம் நிலை வீராங்கனை அா்யனா சபலென்கா 6-0, 6-1 என ஜொ்மன் குவாலிஃபையா் எல்லா சீய்டெலை வீழ்த்தினாா்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

