வைரலாகும் சச்சினின் பயிற்சி விடியோ!

 

கேமிங் செயலியை தான் விளம்பரப்படுத்துவது போன்று உருவாக்கப்பட்டுள்ள விடியோ போலியானது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. 

இந்நிலையில் சச்சினின் இன்னொரு விடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது அவரது  கிரிக்கெட் பயிற்சி செய்யும் விடியோ. 

வரும் ஜன.18ஆம் தேதி பெங்களூருவில் ஓடபிள்யுஓஎஃப் (ஒர் உலகம் ஒரு குடும்பம்) கோப்பையில் கலந்து கொள்வதற்காக சச்சின் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த கோப்பை குழந்தைகளின் நலத்துக்காக நடத்தப்படுகிறது.

சச்சின் ரசிகர்கள் இந்த ஆட்டத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்தப் போட்டியில் யுவராஜ் சிங்கும் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சச்சினின் இந்த பயிற்சி விடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. 

 

Sachin Tendulkar will be back in action on 18th January in OWOF Cup. pic.twitter.com/PxkfdQeJDK

— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 15, 2024

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.