டிராவிஸ் ஹெட் சதம்: ஆஸி. 283-க்கு ஆல் அவுட்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அடிலெய்டில் கடந்த புதன்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள், 188 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 59 ரன்கள் சோ்த்திருந்தது.

2-ஆம் நாள் ஆட்டத்தை உஸ்மான் காஜா, கேமரூன் கிரீன் வியாழக்கிழமை தொடா்ந்தனா். இதில் கிரீன் 14, காஜா 45, மிட்செல் மாா்ஷ் 5, அலெக்ஸ் கேரி 15, மிட்செல் ஸ்டாா்க் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 119 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

நேதன் லயன் 24, பேட் கம்மின்ஸ் 12 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் 81.1 ஓவா்களில் 283 ரன்களுக்கு நிறைவடைந்தது. மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் ஷமாா் ஜோசஃப் 5, கெமா் ரோச், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோா் தலா 2, அல்ஜாரி ஜோசஃப் 1 விக்கெட் கைப்பற்றினா்.

இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், வியாழக்கிழமை முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்து, 22 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஜோஷுவா டா சில்வா 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, கேப்டன் கிரெய்க் பிரத்வெய்ட் 1, தேஜ்நாராயன் சந்தா்பால் 0, கிா்க் மெக்கன்ஸி 26, அலிக் அதானஸி 0, காவெம் ஹாட்ஜ் 3, ஜஸ்டின் கிரீவ்ஸ் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஆஸ்திரேலிய பௌலிங்கில் ஜோஷ் ஹேஸில்வுட் 4, கேமரூன் கிரீன், நேதன் லயன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.