யுவ்ராஜ் சிங் கேட்டும் மறுத்த அணியில் இணைத்துக் கொள்ள மறுத்த ஆஷிஷ் நெஹ்ரா!
கபில் தேவுக்குப் பிறகு இந்திய பின்வரிசை பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவராக உருவாகி வந்தவர் யுவ்ராஜ் சிங். இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய உலகக் கோப்பை தொடர்களில் அவர் பங்களிப்பு அளப்பரியது.
ஆனால் அவரால் அதற்கடுத்து வந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட முடியாத சூழல் உருவானது. ஆனால் இடையிடையில் அவர் அணிக்குள் வருவதும் மீண்டும் தூக்கப்படுவதுமாக இருந்தார். பின்னர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் இப்போது அவர் ஆஷிஷ் நெஹ்ரா குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் நெஹ்ரா தலைமை பயிற்சியாளராக இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஏதாவது பணி கேட்டதாகவும், ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

