இந்தியா - ஆஸி. மகளிர் அணி டி20-ல் மோதல்
நவி மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக 3-0 என கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு நவி மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டித் தொடரை இழந்த இந்திய மகளிர் அணி டி20 தொடரில் பதிலடி கொடுக்க முயற்சி செய்யக்கூடும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

