SA vs IND 2nd Test | இந்தியாவுக்கு 79 ரன்கள் இலக்கு - பும்ரா 6 விக்கெட்... 176 ரன்களில் சுருண்டது தெ.ஆ
கேப்டவுன்: இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதன்மூலம் இந்திய அணி வெற்றிபெற 79 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது சிராஜின் சீரான வேகம், துல்லியம், ஸ்விங் ஆகியவற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது சிராஜ் 9 ஓவர்களை வீசி 3 மெய்டன்களுடன் 15 ரன்களை வழங்கி 6 விக்கெட்களை வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ரா 8 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 25 ரன்களை வழங்கி 2 விக்கெட்களையும், முகேஷ் குமார் 2.2 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் ரன் ஏதும் கொடுக்காமல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

