புரோ கபடி: அதிரடி ஆட்டத்தால் மாஸ் காட்டிய புனேரி பல்டன்…, வீழ்ந்த UP யோதாஸ்!!

புரோ கபடி லீக் தொடரின் முதற்கட்ட லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜனவரி 3) புனேரி பல்டன் அணி, UP யோதாஸ் அணிக்கு எதிராக மோதியது. இதில், புனேரி பல்டன் அணி தொடக்கம் முதலே வேகம் காட்ட தொடங்கியது. இதையடுத்து UP யோதாஸ் அணி புள்ளிகளை சேர்க்க ஆரமித்தது. ஆனாலும், புனேரி பல்டன் அஸ்லம் இனாம்தாரின் அதிரடி ஆட்டத்தால், 40-31 என்ற புள்ளி வித்தியாசத்தில் UP யோதாஸ் அணி தோல்வியை தழுவியது.
இதே போன்று மற்றொரு ஆட்டத்தில், ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், ஜெய்ப்பூர் அணியின் அர்ஜுன் ஒரே ரைடில் 4 போனஸ் பாயிண்ட்ஸ் உட்பட14 புள்ளிகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இதனால்,  ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 45-34 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை தன்வசப்படுத்தியது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு., எப்போது? முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரந்த கோரிக்கை!!!

The post புரோ கபடி: அதிரடி ஆட்டத்தால் மாஸ் காட்டிய புனேரி பல்டன்…, வீழ்ந்த UP யோதாஸ்!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.