6 வீரர்கள் டக்கவுட்: மோசமான சாதனையில் இந்தியா!

 

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

அடுத்து ஆடிய இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக விராட் கோலி 46, ஷுப்மன் கில் 36, ரோஹித் 39 ரன்களும் எடுத்தனர். ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஷ் ஐயர், ஜடேஜா, பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக்கவுட்டானார்கள். 

இதையும் படிக்க:  கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள்: வார்னருக்கு சிறப்பு வரவேற்பு!

தென்னாப்பிரிக்கா சார்பில் ரபாடா, நெகிடி, பர்கர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 

இதுவரை டெஸ்டில் 6 பேர் டக்கவுட்டான மோசமான நிகழ்வு 8 முறை நிகழ்ந்துள்ளது. 

இதையும் படிக்க:  17லிருந்து 45 வயதுவரை சினிமாவில் நீடிக்க காரணம் இதுதான் : ராணி முகர்ஜி பெருமிதம்!

முதல்நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 62/3 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவை விட 36 ரன்கள் பின் தங்கியுள்ளார்கள். 

முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்டில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. 

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.