மல்யுத்தப் போட்டி: பஜ்ரங், அன்டிம் பங்கேற்கவில்லை
புது தில்லி: குரோஷியாவில் இம்மாதம் நடைபெற இருக்கும் ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் பிரதான போட்டியாளர்களான பஜ்ரங் புனியா, அன்டிம் பங்கால் பங்கேற்கவில்லை.
தேசிய விருது வழங்கும் நிகழ்வில் அர்ஜுனா விருது பெறுவதற்காக அன்டிம் பங்காலும், சமீபத்தில் பெருவிரலில் அறுவைச் சிகிச்சை செய்ததால் பஜ்ரங் புனியாவும் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, போட்டியில் பங்கேற்க 13 பேர் கொண்ட அணியை, இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாக குழு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
அணி விவரம்
ஆடவர்
ஃப்ரீஸ்டைல்: அமன் ஷெராவத் (57 கிலோ), யாஷ் (74 கிலோ), தீபக் புனியா (86 கிலோ), விக்கி (97 கிலோ), சுமித் (125 கிலோ).
கிரேக்கோ ரோமன்: ஞானேந்தர் (60 கிலோ), நீரஜ் (67 கிலோ), விகாஸ் (77 கிலோ), சுனில் குமார் (87 கிலோ), நரீந்தர் சீமா (97 கிலோ), நவீன் (130 கிலோ).
மகளிர்
சோனம் (62 கிலோ), ராதிகா (68 கிலோ)
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

