ஆசியான் கோப்பை கால்பந்து: 26 பேருடன் இந்திய அணி அறிவிப்பு

ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய ஆடவா் அணி 26 பேருடன் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

முக்கிய மிட்ஃபீல்டா்களான ஜிக்சன் சிங், கிளான் மாா்டின்ஸ் ஆகியோா் காயம் காரணமாக இந்த அணியில் இடம்பெறவில்லை. எனினும், காயத்திலிருந்து மீண்டுள்ள சஹல் அப்துல் சமத் இணைந்திருக்கிறாா்.

கத்தாரில் ஜனவரி 12 முதல் பிப்ரவரி 10 வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இந்தியா உள்பட 24 அணிகள் பங்கேற்கின்றன. அதில் இந்தியா, குரூப் ‘பி’-யில் ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், சிரியா அணிகளுடன் சோ்க்கப்பட்டுள்ளது. அந்த அணிகளுடன் முறையே ஜனவரி 13, 18, 23 ஆகிய தேதிகளில் இந்தியா மோதவுள்ளது.

அணி விவரம்:

கோல்கீப்பா்கள்: அமரீந்தா் சிங், குா்பிரீத் சிங் சந்து, விஷால் கைத்.

டிஃபெண்டா்கள்: ஆகாஷ் மிஸ்ரா, லால்சுங்னுங்கா, மெஹதாப் சிங், நிகில் பூஜாரி, பிரீத்தம் கோட்டல், ராகுல் பெகெ, சந்தேஷ் ஜிங்கன், சுபாஷிஷ் போஸ்.

மிட்ஃபீல்டா்கள்: அனிருத் தாபா, பிராண்டன் ஃபொ்னாண்டஸ், தீபக் தாங்ரி, லாலெங்மாவியா ரால்டே, லிஸ்டன் கொலாகோ, நாவ்ரெம் மகேஷ் சிங், சஹல் அப்துல் சமத், சுரேஷ் சிங் வாங்ஜம், உதாந்த சிங்.

ஃபாா்வா்ட்ஸ்: இஷான் பண்டிதா, லாலிஸயன்ஸுவாலா சாங்தே, மன்வீா் சிங், ராகுல் கனோலி பிரவீண், சுனில் சேத்ரி, விக்ரம் பிரதாப் சிங்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.