மகாத்மா காந்தியடிகள், தில்லையாடி வள்ளியம்மை, சுவாமி விவேகானந்தர், பேரறிஞர் அண்ணா மற்றும் பகத் சிங் போன்ற மாபெரும் தலைவர்களின் வாழ்க்கையில் வாசிப்புக்கும் தியாகத்திற்கும் இருந்த முக்கியத்துவத்தை விளக்கும் எழுச்சி உரை இது. இளம் தலைமுறையினர் புத்தக வாசிப்பையும், நாட்டின் விடுதலை வரலாற்றையும் உள்வாங்கி உணர வ
மதுரை: சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் மற்றும் ஜி.டி.என். கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O’ எனும் வேளாண் புத்தாக்கத் தொழில்கள் தொடர்பான கருத்தரங்கு, திண்டுக்கல்லில் உள்ள ஜி.டி.என். கலைக் கல்லூரியில் வரும் அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஜோதிடத்தில் அதிகம் கவனம் பெறும் கிரகம் சனி. ஜாதகப்படியும் கோசாரப்படியும் அவருடைய நிலைகளை உன்னிப்பாக கவனிப்போம். ஆனால், அவர் பயத்தைத் தருபவர் அல்ல; வினைகளைத் தீர்க்க உதவும் நீதிமான். அதேநேரம், ஜாதகத்தில் அவருடன் வேறு கிரகங்கள் இருந்தால் என்ன பலன், பரிகாரம் அவசியமா என்பதை நாம் அறிவது அவசியம்.
காஞ்சிபுரம் கோயில் மாநகரம். இங்கே இருக்கும் கோயில்களின் எண்ணிக்கை பல நூறு. அவற்றில் மகிமை வாய்ந்த பல திருத்தலங்கள் அமைந்துள்ளன. அப்படி ஒரு தலம் தான் குமரக்கோட்டம். காஞ்சிபுரத்தின் ராஜவீதியிலேயே அமைந்திருக்கிறது குமரக்கோட்டம்.
அம்மையப்பருடன் முருகப் பெருமான் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை ‘சோமாஸ்கந்த மூர்த்தம்’ என்று வழங்குவர். அதேபோல் ஏகாம்பரேஸ்வரர் கோயில
நம் வாழ்வும் கனவும் நம் பிள்ளைகள்தானே. அவர்களுக்கான முக்கிய தினங்கள் விசேஷமாக அமைவது சிறப்பல்லவா? அவ்வகையில் உங்கள் பிள்ளைகள் அல்லது பேரக் குழந்தைகளுக்கான... பெயர் சூட்டுவது, முடிக்காணிக்கை, காது குத்துதல், அன்னப் பிரசனம் போன்ற மிக முக்கிய வைபவங்களை எந்த நாளில் நடத்தலாம்? வழிகாட்டுகிறார் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்.
பெரும்பாலும் சிவாலயங்களில் ஈசன் கிழக்கு நோக்கியே அருள்பாலிப்பார். ஆனால் மேற்கு நோக்கு ஈசன் அமர்ந்திருக்கும் ஆலயங்களும் உண்டு. அவை மிகவும் விசேஷமானவை என்பார்கள்.
ஒரு மேற்கு நோக்கிய சிவலிங்க தரிசனம் என்பது ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவலிங்க தரிசனத்துக்கு ஒப்பானது என்பர். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான தலம் மேலக்கோட்டையூர் ஸ்ரீமேகநாதேஸ்வரர் கோயில்.
உங்கள் ராசிக்கு 4-ம் இடத்துக்குச் செவ்வாய் வந்திருப்பது, ஓரளவு நன்மையான பலன்களையே தரும். நான்கில் இருக்கும் குருவுடன் சேர்ந்து அமர்ந்துள்ளதால், எதிர்பாராத சில ஆதாயங்கள் உண்டாகும். எனினும் இந்தக் காலகட்டத்தில் புதிய முயற்சிகள், அதிரடி முடிவுகளைத் தள்ளிப்போடுவது அவசியம். அதேபோல் சொத்து வாங்குவது விற்பதிலும் அதீத கவனம் தேவை. தாய்ப் பத்திரங்களை ஒரு முà®