மதுரை மாநகரின் அடையாளம் அன்னை மீனாட்சி அம்மன் கோயில்தான். பரந்து விரிந்து சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயில், எட்டு கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 32 கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும், கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. கிழக்கு மேற்காக 847 அடியும், தெற