நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக... மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த ஜூன் 6-ம் தேதியில் இருந்து ஜூலை 25-ம் தேதி வரை 36 நாள்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.
இடையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 20-ம் தேதி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தி
விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் Anti-Narcotics Task Force (ANTF) அமைப்பை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இதன்படி, மாநிலம் முழுவதும் 65 சிறப்பு ANTF காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 1,625 போலீஸ் பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதில் 65 இன்ஸ்பெக்டர்கள், 260 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீஸ் பணியிடங்கள் அடங்கும்.
சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் தான் போலி வங்கிக் கணக்குகள் (Mule Accounts).
இந்தக் கணக்குகள் மோசடி மூலம் பெற்ற பணத்தை மறைத்து வைப்பதற்கு, மோசடி செய்து பணம் பெறுவதற்கு, மோசடி பணத்தை ஒரு வங்கிக் கணக்கில் இருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றுவதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன.
அது சரி... அதற்கு என்ன இப்போது என்று கேட்கிறீர்களா? தமிழ்நாடு க
மெக்கா ஒப்பந்தம் - சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஆகும்.
ஏன் இந்த ஒப்பந்தம்?
இந்த ஒப்பந்தம் குறித்து மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "இந்த ஒப்பந்தம், எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிராகக் கூட்டுத் தடுப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் முருகனாக விஜய்யைப் புகழ்ந்து பாடிய பாடகர் வேல்முருகனுக்கு, தவெக அரசு கௌரவம் அளித்துள்ளது.
பத்து லட்சத்துக்கு அதிகமாக வருமானம் வரும் கோவில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்யும் குழுவில் ஒரு உறுப்பினராக அவரை நியமித்துள்ளது தவெக அரசு.
சட்டமன்றத்துக்கு வெளியே முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``சட்டமன்றத்தில் இன்று திமுக உறுப்பினர் கோவி.செழியன் பேசும்போது, திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டத
ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி இளைஞர்கள் ஓட்டிய கார் மோதியதில் படுகாயமடைந்த மருத்துவ மாணவி பிரியங்கா உயிரிழந்தார்.
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக, முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 8) நடைபெற்றது.
இதில் தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸின் 11 எம்.பிக்கள், விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகளின் தலா 2 எம்.பிக்கள், ஐயுஎம்எல், மதிமுகவின் தலா எம்.பி என மொத்தம் 19 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.