40 வயதுகளில் இருக்கும், இந்தியாவில் பிறந்த இரண்டு பெண்கள், குழந்தைகளாக இருக்கும்போதே வெவ்வேறு குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டு, நெதர்லாந்தில் அருகருகே வளர்ந்தவர்கள். இப்போது அவர்கள் இருவரும் உயிரியல் ரீதியாக சகோதரிகள் என்பது தெரியவந்துள்ளது.
குறட்டை விடுவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்று என்பதால், பெரும்பாலானோர் அதை ஒரு தொந்தரவாக மட்டுமே கருதி சிகிச்சை எடுக்காமல் விட்டுவிடுகின்றனர். ஆனால், குறட்டை விடுபவரின் அருகில் தூங்குவது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2026 பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் புதுடெல்லி பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. 45 பக்கங்களும், 140 அம்சங்களையும் கொண்டுள்ள இந்த பிரகடனத்தில் அமெரிக்காவை பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஷி ஜின்பிங் புதுடெல்லி வந்துள்ளார். ஷி ஜின்பிங்கைத் தவிர, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் பல நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளத் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஜின்பிங்கின் இந்திய பயணம் மற்றும் பிரிக்ஸ் மாநாடு பற்றி சீன ஊடகங்கள் கூறுவது என்ன?
திருமலையில் உள்ள திருமலை வெங்கடேஸ்வரர் கோயில் பெருமாளை தரிசிக்க தினமும் 60,000 முதல் 80,000 பேர் வரை வருகின்றனர். திருமலை என்றால் நிரந்தர நலனும் பசுமையான நுழைவாயிலும் என்று கூறப்படுகிறது.
சௌதி அரேபியா மீதான ஹூத்திகளின் தாக்குதல்கள் குறித்துப் பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன; அண்மையில் கையெழுத்தான மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் காரணமாக பாகிஸ்தான் ஒரு பிராந்தியப் போருக்குள் இழுத்துச் செல்லப்படுமா என்ற கேள்வியையும் அவை எழுப்பியுள்ளன.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர், தனது காதலியை பிரிவதற்கு முன்பு அவருக்காகச் செலவழித்த லட்சக்கணக்கான டாலரை திரும்பக் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் என்ன நடந்தது?