வேலைக்குச் செல்ல விருப்பமின்றி நாஸ்டி காள் ஆடை பிராண்டைத் தொடங்கி பில்லியனராக உயர்ந்த சோபியா அமரூசோ, நிறுவனத்தின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி மற்றும் தவறான முதலீட்டு மதிப்பீடுகளால் திவாலாகி, பின்னர் பிராண்ட் உரிமைகளை விற்று புதிய தொழிலில் கால்பதித்தார்.
புதுடெல்லியில் நடைபெற்று வரும் 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில் மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நிலைப்பாடு தற்போது பேசுபொருளாகியுள்ளது. பிரிக்ஸ் பிரகடனத்தில் அமெரிக்கா, இஸ்ரேலின் பெயரை குறிப்பிடாமல் அந்நாடுகள் மீது மறைமுகமாக விமர்சனங்கள் இடம் பெற்றிருப்பது எதைக் காட்டுகிறது?
லண்டனின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடந்த Michelin Le Mans Cup கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக இந்த ரேஸூக்கு வந்த முதல்வர் விஜய், ரேஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விஜய்யும் அஜித்தும் கட்டியணைத்து நட்பை பகிர்ந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பயங்கர வைரல்.
நடைபெறவுள்ள இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்சியும் தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என, அக்கட்சிகள் அறிவித்துள்ளன. இரு கட்சிகளின் மாநில செயலாளர்களும் தனித்தனியே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர்கள் தெரிவித்தனர்.
நடைபெறவுள்ள இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்சியும் தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என, அக்கட்சிகள் அறிவித்துள்ளன. இரு கட்சிகளின் மாநில செயலாளர்களும் தனித்தனியே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர்கள் தெரிவித்தனர்.
மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு அக்டோபர் 6 இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க, அ.தி.மு.கவை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் நிர்பந்தத்தில் த.வெ.க உள்ளதாகக் கூறும் அரசியல் விமர்சகர்கள், அவ்வாறு பெறாவிட்டால் முதலமைச்சர் ஜோசப் விஜய் மீதான பிம்பத்தில் சரிவு ஏற்படும் என்கின்றனர்.
இறந்த தனது தாயின் உடலை வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக வைத்திருந்ததுடன், அவரது ஓய்வூதியம் மற்றும் அரசு நலத்திட்ட உதவித்தொகைகளையும் தொடர்ந்து பெற்றுவந்த ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற லு மான் கோப்பை (Le Mans Cup) கார் பந்தயத்தை சனிக்கிழமையன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். இந்த பந்தயத்தில் அஜித்குமார் 38வது இடத்தைப் பிடித்துள்ளார்.