கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினர் சிலர், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா நகர் பகுதிக்கு 21 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்தை இயக்கவிடாமல்