சிஜேபி முக்கிய தலைவர்களான அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகிய மூவரும் சனிக்கிழமை டெல்லி விமான நிலையத்தில் விமானத்துக்குள் இருந்தபோதே காவலில் எடுக்கப்பட்டு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். காவல்துறை பிடியில் இருந்த போது தங்களுக்கு என்ன நடந்தது என்று அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கினர்.
சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோதி, தமிழக முதலமைச்சர் விஜயுடன் மெட்ரோ ரயிலில் பயணித்தார். தொடர்ந்து சென்னை ஐஐடியில் பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்.
டெல்லியில் சுமார் 20,000 போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஏறத்தாழ 35,000 பாதுகாப்புப் பணியாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் டெல்லி காவல்துறையினருடன், பிற பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இவ்வளவு பெரிய அளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குருத்வாரா பங்களா சாஹிப் வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தது மற்றும் அவர்களை வெளியேற்ற காவல்துறை மேற்கொண்ட முயற்சியும் அதுகுறித்து எழுப்பப்படும் கேள்விகளும் சர்ச்சையாகி வருகின்றன. இதில் உண்மையில் நடந்தது என்ன?
ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ள கவலைகள் தேவையற்றவை என்றும் இந்தியாவின் உள்விவகாரங்களில் தேவையின்றித் தலையிட வேண்டாம் எனவும் ஜெனீவாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.