சேவாக் ஏற்படுத்தும் தாக்கத்தை அவர் குவிக்கும் ரன்களை மட்டுமே வைத்து அளவிட்டு விட முடியாது என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் ராகுல் பட்டாச்சார்யா. "சேவாக்கின் அதிரடி ஆட்டம் சக பேட்டர்களுக்கு நெருக்கடியை குறைத்தது. சேவாக் வேகமாக ரன் சேர்த்த போட்டிகளில் சச்சின் பொறுமையாக விளையாடினார். இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடும் பொறுப்பை சேவாக்கிடம் எடுத்துகà¯
நோர்ஸ் மக்கள் கி.பி. 1000-ஆம் ஆண்டிலேயே கனடாவை அடைந்தனர், மேலும் அதனை ஆய்வு செய்வதற்கான தளமாகவும் பயன்படுத்தினர். அட்லான்டிக் கடலைக் கடந்த முதல் ஐரோப்பியர்களின் "மறைக்கப்பட்ட வரலாற்றை" பிபிசி ஆராய்ந்துள்ளது.
2026-ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்ற புகைப்படம், யானைகளின் உணர்ச்சிப் பூர்வமான வாழ்க்கையின் சிக்கலான தன்மையை வெளிப்படுத்தும் வகையில், அரிதாகக் காணப்படும் அவற்றின் ஓர் நடத்தையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
கண்காணிப்பு கேமராக்கள் மனிதர்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் குற்றங்களின் விசாரணைகள் மேம்பட்டுள்ள போதிலும் நிபுணர்கள் இதில் தனியுரிமை தொடர்பான கவலைகளையும் எழுப்புகின்றனர்.
வெளியில் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலத் தோன்றினாலும், உள்ளுக்குள் நீங்கள் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தால், அது வழக்கத்திற்கு மாறான மனச்சோர்வின் அறிகுறியாக இருக்கலாம். ஆனால், உண்மையான உணர்வுகளை மறைப்பது மனநலத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடும்.
நவராத்திரியின்போது கர்பா நடனக் கூட்டாளிகளை வாடகைக்கு வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவிய விளம்பரங்களை ஆய்வு செய்த பிபிசி, 99 ரூபாய் கட்டணம் வசூலித்துப் போலியான சேவை மூலம் மோசடி செய்வதுடன், தனிப்பட்ட தகவல்களையும் தவறாகப் பயன்படுத்தும் அபாயம் இருப்பதைக் கண்டறிந்தது.
மெக்காவில் உள்ள ஒரு மசூதியில் தகாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில், கைது, விசாரணை மற்றும் தண்டனை குறித்து தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்காதது வியன்னா உடன்படிக்கையை மீறியதா எனக் கேள்வி எழுந்துள்ள நிலையில், செளதி அரேபியாவிடம் வங்கதேசம் விரிவான விளக்கம் கோரியுள்ளது.
புகழ்பெற்ற விமானி அமீலியா ஏர்ஹார்ட், 1937-ஆம் ஆண்டு உலகைச் சுற்றி வரும் முயற்சியின்போது மாயமானார். அவர் பயணம் செய்த விமானத்தின் சிதைவுகள் இருக்கக்கூடும் எனக் கருதப்படும் தொலைதூரத் தீவில் ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சென்றடைந்துள்ளது.