சௌதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பல்ஜிந்தர் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவரது குடும்பத்தினர் இந்திய மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளிடம் உதவி கோரி வருகின்றனர்.
கென்யாவின் மவுண்ட் எல்கான் பகுதியில் வாழும் ஆப்பிரிக்க யானைகள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ள 35-க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவரங்களைப் பயன்படுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
திருவள்ளூர் நகராட்சி தனது கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் கூவம் ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது என்று தமிழக அரசின் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நீர் செம்பரம்பாக்கம் ஏரியை வந்தடைவதால் சென்னைவாசிகளின் குடிநீர் பாதிக்கப்படக் கூடும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
தமிழ்நாடு அரசின் கீழ் வரும் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தாது என்கிற அரசாணை வெளியான சில மணி நேரத்திலேயே திரும்பப் பெறப்பட்டுள்ளது. என்ன நடந்தது?
கரூரில் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயர சம்பவத்தின் முதலாம் ஆண்டை முன்னிட்டு வேலுசாமிபுரத்தில் பிபிசி தமிழ் களஆய்வு மேற்கொண்டது. கடந்த ஓராண்டாக நடந்த நிகழ்வுகளும், அங்குள்ள மக்களின் தற்போதைய உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் என்ன?
மகாராஷ்டிராவில் கோகோ-கோலா பாட்டிலிங் ஆலை திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. ஜல்கான் மாவட்டம் ஜாம்னர் எம்.ஐ.டி.சி பகுதியில் ஒரு புதிய திட்டத்துடன் சேர்த்து, சுமார் ரூ. 1,200 கோடி முதலீட்டை ஈர்ப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பது ஏன்?
சமீபத்தில் ஐஐடி மும்பையில் இரண்டாம் ஆண்டு பி.டெக் படித்து வந்த சாகில் ரவீந்திர வகோடே என்ற மாணவர், கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி தற்கொலை கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
‘ரெட்வுட்’ புத்தகம், பிரிட்டனுக்காக உளவாளியாக குஜிச்கின் தேர்வு செய்யப்பட்டதில் தொடங்கி, தெஹ்ரானில் அவர் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கைகள், பசர்கான் எல்லை வழியாக அவர் தப்பிச் சென்றது வரை நடந்தவற்றை சுவாரஸ்யமாக விவரிக்கிறது.
வங்கதேசத்தில் நரி இறைச்சி, தஷக் வகை பல்லிகள் மற்றும் அட்டை எண்ணெய்க்கு மருத்துவ பலன்கள் இருக்கிறது என்கிற நம்பிக்கை பரவலாக நிலவி வருகிறது. இதனால் பாதுகாக்கப்பட்ட இந்த விலங்குகள் வேட்டையாடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த விலங்குகளில் மருத்துவ பலன்கள் உள்ளனவா? நிபுணர்கள் கூறுவது என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.