விஜய் அவ்வளவாக எதையும் பார்த்துப் படிக்க மாட்டார்; அவருக்கு நான்-வெஜ் பிடிக்கும் - ஷோபா ஷேரிங்ஸ்
தமிழக முதலமைச்சர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகருக்கு பெஸ்ட் மாம் விருதை வழங்கினார் ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன், பத்திரிகையாளர் ரபி பெர்னார்ட்.
விருது பெற்ற பின், ``விஜய்க்கு நான்-வெஜ் ரொம்பப் பிடிக்கும். மட்டன், பிரான் எல்லாம் நல்லா சாப்பிடுவாரு. தோசைதான் அவரோட ஃபேவரைட். இப்பவும் அவர் வீட்டுக்குப் போனா, `என்ன தோசை வேணும்?’னு கேட்டு வெரைட்டியா ஊத்திக் குடுப்பாரு.
1984-ல் `வெற்றி’ என்ற படத்தின்போது எடுத்த படம் இது. அதில், அப்பா கார் வந்துருக்குப்பா என்று முதல் வசனத்தைப் பேசினார். கே.கே.சுந்தர் சார்தான் விஜய்யின் அப்பாவாக நடித்திருந்தார். விஜய்யின் தங்கை அந்த முதல் வசனத்தைப் பேசி, கிண்டலடித்துக்கொண்டேயிருப்பார்.
நாளைய தீர்ப்பில் முதல் நாளில் ராதா ரவி சாருடன் ஒரு கடினமான காட்சியை எஸ்.ஏ.சி கொடுத்தார். ஆனால், விஜய் ஒரே டேக்கில் ஓ.கே செய்துவிட்டார். எஸ்.ஏ.சி வீட்டுக்கு வந்து அவன்கிட்ட ஒரு ஸ்பார்க் இருக்கு’ன்னு சொன்னாரு. அவரு அவ்வளவு ஈஸியா எதையும் பாராட்ட மாட்டார்.
பதவியேற்பு விழாவில் விஜய் பார்க்காமல் உறுதிமொழி எடுத்ததுதான் ஆச்சர்யமாக இருந்தது. அவர் அவ்வளவாக எதையும் பார்த்துப் படிக்க மாட்டார். காட்சிகளில் வசனங்களை உள்வாங்கி, புரிந்துகொள்ளும் பழக்கம் அவருக்கு உண்டு. விஜய் பதவியேற்கும்போது என்னுடைய கணவரின் முகத்தைத்தான் பார்த்துக்கொண்டே இருந்தேன்" எனப் பகிர்ந்து கொண்டார்.

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

