கள்ளக்குறிச்சி தவெக MLA-வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மெசேஜ் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என, தமிழ்நாடு காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று கூறப்பட்டிருந்த நிலையில் தனக்கு அநாகரிகமாக தவெக எம்எல்ஏ மெசேஜ் அனுப்பியதாக மாவட்ட ஆட்சியர், டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்திற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், "கள்ளக்குறிச்சியில் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பில் இருப்பவரே இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தவறு.

பெண்கள் தவறு நடக்கும்போது பயப்படாமல் புகார் அளிப்பது என்பது மிக மிக முக்கியம். பெண்களுடைய பாதுகாப்பு என்பது முக்கியமானது. குறிப்பாக வேலை செய்யும் இடங்களில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பும், மரியாதையும் அவசியமானது. இந்தச் சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விக்னேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டு புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனடியாகக் கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது, நவம்பர் 11-ந் தேதி அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்திருந்தார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அருள் விக்னேஷ் பாவம். தனது செல்போனையும் சிசிடிவி காட்சிகளையும் சோதித்துப் பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில், வாட்ஸ்அப் தகவல்களை வைத்து ஊடக விசாரணை நடத்துவது நியாயமல்ல” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.