Elon Musk: மதிய உணவுக்கு No! - எலான் மஸ்க்கின் வித்தியாசமான டயட் பிளான்!

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் உணவுப் பழக்கம் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

சமீபத்தில் அவர் பகிர்ந்த தகவலின்படி, தனது காலை உணவில் ஸ்டீக் (Steak), முட்டை மற்றும் காபி ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்கிறார். ஆனால், மதிய உணவைப் பொறுத்தவரை பெரும்பாலான நாள்களில் சாப்பிடுவதில்லை என்றும், சில நேரங்களில் மிகக் குறைவாகவே எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இரவு உணவில் குறிப்பிட்ட ஒரே உணவுமுறையைப் பின்பற்றாமல், தனக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சீஸ் பர்கர் (Cheeseburger) அவருக்குப் பிடித்த உணவுகளில் ஒன்று.

எலான் மஸ்க்

இதற்கு முன்பு, இடைவிட்டு உண்ணாவிரதம் (Intermittent Fasting) மேற்கொண்டு சுமார் 20 பவுண்டு எடையைக் குறைத்ததாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார்.

மஸ்க் தனது உணவுப் பழக்கத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட தகவல்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, காலை உணவில் அதிகப் புரதம் கொண்ட உணவுகளைச் சேர்த்துக்கொண்டு, மதிய உணவைத் தவிர்ப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இருப்பினும், அவரது உணவுப் பழக்கத்துக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள் குறித்து அவர் விரிவான விளக்கத்தை இன்னும் அளிக்கவில்லை.

அவரது உணவுப் பழக்கம் தற்போது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தினாலும், இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறைதான். இதனை அனைவரும் பின்பற்ற ஏற்ற உணவுத் திட்டமாகக் கருத முடியாது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.