Jio: ஜியோவின் Happy New Year 2.0 சலுகை! ₹399 முதல் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்; முழு விவரம்

தனது 10-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, Happy New Year 2.0 என்ற பெயரில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது Reliance Jio. இதில் ₹399 மற்றும் ₹3,999 என இரண்டு முக்கியத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

₹ 399 திட்டத்திற்கு என்னென்ன சலுகை?

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்தத் திட்டத்தில் Unlimited 4G மற்றும் 5G டேட்டா, Unlimited வாய்ஸ் கால்கள், தினமும் 100 SMS வழங்கப்படுகின்றன. மேலும், 12 மாதங்களுக்கான Canva Pro சந்தா, JioHotstar Mobile, FanCode, JioGames மற்றும் 50GB JioAICloud சேமிப்பு வசதியும் வழங்கப்படுகிறது.

₹3,999 திட்டத்திற்கு என்னென்ன சலுகை?

365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த வருடாந்திரத் திட்டத்திலும் Unlimited 4G, 5G டேட்டா, Unlimited கால்கள் மற்றும் தினமும் 100 SMS கிடைக்கும். கூடுதலாக, 12 மாத Canva Pro Lite சந்தா, JioHotstar Mobile, FanCode மற்றும் 50GB JioAICloud சேமிப்பு வழங்கப்படுகிறது.

கூடுதல் டேட்டா சலுகைகள்:

₹15-க்கு ஒரு நாள் மற்றும் ₹25-க்கு இரண்டு நாட்கள் Unlimited 5G டேட்டா பெறலாம். மேலும், ₹50-க்கு 28 நாட்களுக்கு தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை Unlimited 4G மற்றும் 5G டேட்டா வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

₹399, ₹3,999 மற்றும் ₹25 திட்டங்கள் நவம்பர் 24 முதல் கிடைக்கும். ₹50 இரவு நேர டேட்டா திட்டம் நவம்பர் 26 முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.