திருப்பரங்குன்றத்தில் இருப்பது நில அளவைக்கல்தான்! - தமிழக அரசு வெளியிட்ட ஆதாரம்!

கார்த்திகை தீப தினமான நாளை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல, அது நில அளவைக் கல்தான் என தமிழக அரசு சில ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறது.

அரசு வெளியிட்டிருக்கும் ஆவணம்

``தமிழ்நாட்டில் உள்ள மாபெரும் முக்கோண அளவை நிலையங்களின் ஆவணப்படுத்தல்" (Documentation of The Great Trigonometrical Survey Stations (GTS) in Tamil Nadu – Summary) என்ற அறிக்கையின் சுருக்கமாகும். தமிழ்நாடு அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறை மற்றும் தொல்லியல் துறை ஆகியவை இணைந்து (மற்றும் வருவாய், வனத் துறைகளுடன் இணைந்து) இந்த தரவுகளை வெளியிட்டிருக்கின்றன.

அதன்படி திருப்பரங்குன்றத்தை போல தமிழகத்தில் 800 க்கும் அதிகமான நிலஅளவைக் கல்கள் பல இடங்களில் இருப்பதாகவும், அதில் 484 நில அளவை கற்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும், இந்த நில அளவைக் கற்கள் இப்போது எந்த நிலையில் இருக்கின்றன என்பதையும் புகைப்பட ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அரசு வெளியிட்டிருக்கும் ஆவணம்
அரசு வெளியிட்டிருக்கும் ஆவணம்

நாளை கார்த்திகை தீபம் நடைபெறவிருக்கும் நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் டிஜிபி மகேஸ்குமார் அகர்வால், அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோருடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இதைத் தொடர்ந்தே இந்தத் தரவுகள் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், நாளை திருப்பரங்குன்றத்தில் அரசு என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.