அதள பாதாளத்திற்கு சென்ற இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் சுமார் 1500 புள்ளிகள் சரிவு...
இரண்டு நாள் ஏற்றத்திற்கு பிறகு, வங்கி மற்றும் உலோகத் துறைப் பங்குகளில் முதலீட்டாளர்கள் லாபத்தை ஈட்டப் பங்குகளை விற்றதால் இன்றைய வர்த்தகத்தில் இந்தியப் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,483.72 புள்ளிகள் சரிந்து 82,435.99 புள்ளிகளாகவும், நிஃப்டி 450.95 புள்ளிகள் சரிந்து 25,349.65 புள்ளிகளாகவும் நிலைபெற்றன.
முதலில் ஏற்றத்துடன் தொடங்கிய சந்தை, பிற்பகுதியில் லாபப் பதிவு காரணமாகத் தொடர் வீழ்ச்சியைக் கண்டது. ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றின் பங்குகள் கணிசமாகச் சரிந்தன. ஏபிஎல் அப்பல்லோ டியூப்ஸ் நிறுவனத்தின் பங்குகளைக் கையகப்படுத்தும் அறிவிப்பைத் தொடர்ந்து டாடா ஸ்டீல் பங்கும் 8.16 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதேநேரத்தில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எச்.சி.எல் டெக், டைட்டன் மற்றும் ஐடிசி பங்குகள் ஏற்றம் கண்டன.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் ஆசியச் சந்தைகளின் கலவையான போக்கு ஆகியவையும் தாக்கத்தை ஏற்படுத்தின. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.68 சதவீதம் குறைந்து பேரலுக்கு 91.94 டாலராக வர்த்தகமானது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


