ரூ.9 கோடி மதிப்புள்ள மருந்து ரூ.2.5 லட்சம்; 7 குழந்தைகளுக்கும் இலவச சிகிச்சைக்கு உதவிய மருத்துவர்!
ஹைதராபாத் மருத்துவரின் முயற்சியால் அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஏழு குழந்தைகளுக்கு ஓராண்டுக்கான மருந்து இலவசமாகக் கிடைக்க உள்ளது.
Allan-Herndon-Dudley Syndrome (AHDS) எனப்படும் அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஏழு குழந்தைகளுக்கு, Tiratricol என்ற மருந்து இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த நோயால் மூளைக்குத் தைராய்டு ஹார்மோன் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு, குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு மண்டலச் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்.
இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ், Access to Medicines India அமைப்புடன் இணைந்து மாற்று வழியைத் தேடினார். நெதர்லாந்தின் Pharmaceutical Accountability Foundation மற்றும் Transvaal Pharmacy உதவியுடன் மருந்தின் சிறப்பு தயாரிப்பு முறை உருவாக்கப்பட்டது.

இந்த முயற்சி இறுதித் தீர்வல்ல. மருந்தை இந்தியாவிலேயே தயாரித்து, இதே நோயால் பாதிக்கப்படும் மற்ற குழந்தைகளுக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்ய மத்திய அரசை அணுக டாக்டர் சிவரஞ்சனி திட்டமிட்டுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


