ஆந்திராவின் அதிர்ச்சியூட்டும் ரகசிய முதலீட்டு வியூகம் லீக் ஆகிவிட்டது! - ஆந்திரா அமைச்சர் கிண்டல்

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பல முதலீடுகள் ஆந்திரா பக்கம் செல்கின்றன. தமிழ்நாடு எளிதாகப் பெற்றிருக்க வேண்டிய பல முதலீடுகளை ஆந்திராவிடம் கோட்டை விட்டிருக்கிறது தவெக அரசு என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம்

இந்த நிலையில், கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்திலிருந்த 15 ஊழியர்கள் ஆந்திராவிடம் தமிழ்நாட்டின் முதலீட்டு ரகசியத் தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள் என்கிற புகார் சமீபத்தில் எழும்பிப் பிரச்னை பெரிதாகி வருகிறது.

லோகேஷ் நாரா பதிவு

இந்த ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு, கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டனர் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் என்பது தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் ஆகும். சில மாதங்களுக்கு முன்பு, தங்களுடைய நிறுவனத்திலிருந்து பல ஊழியர்கள் ராஜினாமா செய்தார்கள் என்கிற குற்றச்சாட்டை மறுத்துள்ளது கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம்.

லோகேஷ் நாரா கேலி

இந்த நேரத்தில் ஆந்திரப் பிரதேச அமைச்சர்களில் ஒருவரான லோகேஷ் நாரா தனது எக்ஸ் பக்கத்தில், “பிரேக்கிங்: ஆந்திரப் பிரதேசத்தின் அதிர்ச்சியூட்டும் ரகசிய முதலீட்டு வியூகம் லீக் ஆகிவிட்டது!

அதன் பெயர் ‘முதலீட்டாளர்களுக்கு அன்றே பதில் அளிப்பது’. தாராளமாக இதை நீங்களும் காப்பி அடித்துக்கொள்ளலாம்” என்று கேலி செய்வது போலப் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.