கரூர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை; குடும்ப பிரச்னை காரணமா?!

கரூர் மாவட்டம், சின்ன காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது: 63). இவரது மனைவி ஜானகி (வயது: 60). இந்த தம்பதியின் மகள் மகள் சுகுணா (வயது: 35). இவருக்கு வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பவருடன் திருமணமாகி, சிவானி (வயது: 10), ஆதிரன் (வயது: 4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுகுணா மற்றும் அவரது கணவர் பிரபு இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், இன்று சின்ன காளிபாளையம் பகுதியில் ராமசாமிக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில், ராமசாமி, ஜானகி, சுகுணா மற்றும் சுகுணாவின் இரண்டு குழந்தைகள் என ஐந்து பேரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.

suicide

இதனை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையிலான போலீஸார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஐந்து பேரின் உடல்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஐந்து பேரும் உயிரிழந்ததற்கான காரணம் குடும்பப் பிரச்னையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாரின் விசாரணைக்குப் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும் என்று சொல்கிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ள சம்பவம், கரூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.