சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனை: CII 6-வது தமிழ்நாடு மெட்கிளேவ் 2026-ல் இரு உயரிய விருதுகள்!

இலாப நோக்கமில்லாத புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையான சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனை (Sringeri Sharada Equitas Hospital), CII தென்னகப் பிரிவு (CII Southern Region)  நடத்திய 6-வது ‘CII தமிழ்நாடு மெட்கிளேவ் 2026’ மாநாட்டில் இரு உயரிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

கடந்த அக்டோபர் 24, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், 100 படுக்கைகளுக்கும் குறைவான மருத்துவமனைகளுக்கான பிரிவில் பின்வரும் விருதுகள் வழங்கப்பட்டன:

  1. புற்றுநோய் சிகிச்சைக்கான விருது 

  2. செவிலியர் சேவைக்கான விருது 

மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் அனைத்துப் பணியாளர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு உணர்விற்கும் கூட்டு முயற்சிக்கும் கிடைத்த மிகச்சிறந்த அங்கீகாரமாக இவ்விருதுகள் அமைந்துள்ளன.

லாபநோக்கற்ற (Not-for-profit) புற்றுநோய் மருத்துவமனையாக சென்னை கௌரிவாக்கத்தில் இயங்கிவரும் சிருங்கேரி சாரதா எக்விடாஸ் மருத்துவமனையானது புற்றுநோய் சிகிச்சையை தேவைப்படும் எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.