சளி, இருமலை சுலபமாக போக்க சில வழிகள்!.. வாங்க பார்ப்போம்...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சளி, இருமல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். சளி பிடித்து விட்டால் சனியன் பிடித்து விட்டது போல என்று பெரியவர்கள் சொல்வார்கள். குறைந்தது ஒரு வார காலம் சளி, இருமல் பாடாய் படுத்திவிடும். என்னதான் மருத்துவரிடம் சென்று மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் சளி உடனடியாக நம்மை விட்டு விலகுவதில்லை.
இந்நிலையில், சளி மற்றும் இருமலை குணப்படுத்த சில இயற்கை வழிகள் மற்றும் வீட்டு வைத்திய முறைகளை இங்கே பார்ப்போம்
தேன், இஞ்சி: தேனில் இஞ்சி சாறு கலந்து பருகலாம். இஞ்சி டீ அருந்தலாம்.. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு தேன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
உப்பு நீரை கொந்தளித்தல்: வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து தொண்டை பகுதியில் படும்படி வாய் கொப்பளித்தால் தொண்டை வலி நீங்கும்.
மஞ்சள் கலந்த பால்: சூடான் பாலில் சிறிதளவு மஞ்சள் கலந்து அருந்தலாம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், அதில் உள்ள ஆண்ட் - ஆக்ஸிடண்ட் தொண்டை வீக்கத்தை சரிசெய்யும்.
ஆவி பிடிப்பது: நன்றாக கொதித்த நீரில் யூகலிப்டஸ் தைலம் அல்லது புதினா கலந்து நீராவியை சுவாசிக்கலாம். அல்லது விக்ஸ் மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும் டியூப் மாத்திரைகளும் பயன்படுத்தலாம். இதனால் மூக்கடைப்பு நீங்கு சளியும் கரைந்து வெளியேறும்...
மிளகு: டீயில் கருமிளகு கலந்து அருந்தலாம். அதேபோல், கோழி, ஆடு சூப் அல்லது கசாயம் தயாரித்து மிளகு தூள் கலந்து அருந்துவதும் நல்ல பலனை தரும்..
சூடான நீர்: சளி, இருமல் சரியாகும் வரை குளிர்ந்த நீர் மற்றும் பானங்களை குடிப்பதை நிறுத்திவிட்டு சூடான நீர் அருந்தவேண்டும்..
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

