தீபாவளி முகூர்த்த வர்த்தகம்: 81,000-க்கு கீழ் சரிந்து முடிந்த சென்செக்ஸ், 25,000-க்கு கீழ் நிஃப்டி!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு முகூர்த்த வர்த்தகத்தில், இந்திய பங்குச் ந்தை குறியீடுகள் சற்று சரிவுடன் நிறைவடைந்தன. இதனால் இந்திய பங்குச்சந்தையின் 8 நாட்கள் தொடர் ஏற்றம் முடிவுக்கு வந்துள்ளது.
வர்த்தகத்தின் தொடக்கத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து 81,406 புள்ளிகளை எட்டியது. ஆனால், இறுதியில் 28.62 புள்ளிகள் சரிந்து 80,999.40 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல, என்எஸ்இ நிஃப்டி 79.15 புள்ளிகள் உயர்ந்து 25,109.40 புள்ளிகளில் தொடங்கியது, ஆனால் வர்த்தக முடிவில் 43.95 புள்ளிகள் குறைந்து 24,986.40 புள்ளிகளில் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் பங்குகளில் சன் ஃபார்மா 2.96% உயர்ந்து அதிக லாபம் ஈட்டிய பங்காக உருவெடுத்தது. அதைத் தொடர்ந்து டாடா ஸ்டீல், மாருதி, பவர் கிரிட், அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் ஆகியவை லாபத்தில் முடிந்தன. மறுபுறம், எம் அண்ட் எம் 0.92% சரிந்து அதிக இழப்பைச் சந்தித்தது. இண்டிகோ, டிரென்ட், இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல் போன்ற பங்குகள் சரிவைச் சந்தித்தன.
இந்து பாரம்பரியத்தின் புதிய ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படும் தீபாவளி நாளில், நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும் நோக்கில் இந்த அடையாள முகூர்த்த வர்த்தகம் குறுகிய நேரத்திற்கு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

