ஒரே ரீசார்ஜ்.. 3 ஆண்டுகள் வேலிடிட்டி!.. ஜியோ அறிமுகம் செய்யும் புதிய திட்டம்...
இந்தியாவைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பல ஃப்ரிபெய்டு ரீசார்ஜ் திட்டங்களை நடைமுறையில் வைத்துள்ளன. ஒரு மாதம், இரண்டு மாதம், மூன்று மாதம், 6 மாதங்கள், ஒரு வருடம், இரண்டு, மூன்று வருடங்கள் வரை வேலிடிட்டியுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை இரண்டு நிறுவனங்களும் வைத்துள்ளன.
கடந்த சில நாட்களாகவே ஏர்டெல் நிறுவனமும், ஜியோ நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு பல புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.299 திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில், ஒரே ரீசார்ஜில் 3 ஆண்டுகள் சேவை பெறும் வகையில் புதிய திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.10,000 மதிப்பிலான இந்த கட்டத்தில் தினமும் 2.5 GB அன்லிமிடெட் 5G வாய்ஸ் கால் மற்றும் ஹாட்ஸ்டார் சந்தா உள்ளிட்ட வசதிகள் இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


