திடீரென 1600 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. 3 முக்கிய காரணங்கள்!
இந்தியப் பங்குச்சந்தைகளில் காளைகளின் ஆதிக்கம் மீண்டும் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 1651 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து வர்த்தகமானது. அதேபோல என்எஸ்இ நிஃப்டி 473 புள்ளிகள் உயர்ந்து 24453 புள்ளிகளை நோக்கிப் புயல் வேகத்தில் முன்னேறியுள்ளது. இந்தியப் பங்குச்சந்தையின் இந்த திடீர் ஏற்றத்திற்கு முக்கியமாக 3 காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
1. கச்சா எண்ணெய் விலை சரிவு: உலக அளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $94 அளவுக்குச் சரிந்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றங்கள் தணியும் என்ற எதிர்பார்ப்பால் எண்ணெய் விலை குறைந்துள்ளது. அதிகளவில் எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவிற்கு இது மிகப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
2. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை : தொடர்ந்து பங்குகளை விற்று வந்த வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்கள், தற்போது மீண்டும் இந்தியப் பங்குகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். கடந்த 4 வர்த்தக தினங்களில் மட்டும் ரூ.20,834 கோடி மதிப்பிலான பங்குகளை அவர்கள் வாங்கியுள்ளது வர்த்தகத்திற்குப் பலம் சேர்த்துள்ளது.
3. அமெரிக்க தேர்தல் முடிவுகள்: அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் உலகளாவிய வர்த்தகக் கொள்கைகளில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இது சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


