அமெரிக்க தேர்தல் எதிரொலி: தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு!
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக அதிரடியாக உயர்ந்துள்ளது.
சர்வதேச அரசியல் சூழல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் உலக பங்குச்சந்தைகளின் செயல்பாடு ஆகியவையே தங்கத்தின் விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. கடந்த சில வாரங்களாக சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே மீண்டும் ஏற்றம் காண தொடங்கியது.
சென்னையில் இன்று காலையில் சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,02,600-க்கு விற்பனையானது. தொடர்ந்து, பிற்பகல் நிலவரப்படி மீண்டும் சவரனுக்கு ரூ. 2,200 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1,04,800 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 13,100-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 210-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.10 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது நகைப் பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


