அதிமுக-விலிருந்து வேலுமணி, சி.வி.சண்முகம் நீக்கம்? - இ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு?

அ.தி.மு.கவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணியை நீக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் சொல்லப்படுகிறது. நடப்பது என்ன?

2026 தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்குள் மிகப்பெரிய கலகத்தை உண்டாக்கியது. ஏற்கெனவே, சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களால் கட்சியில் பிளவு உண்டானதைப்போல, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் தலைமையில் 25 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தினர். சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும், எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு எதிராக, த.வெ.க அரசை ஆதரித்து வாக்களித்தனர். தொடர்ந்து, விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆறு எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.கவில் இணைந்தனர். எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் இணைந்தாலும் கட்சியில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. உதாரணமாக, அவர்கள் வகித்த மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்த எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதை வழங்கவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்தவர்கள் கட்சி நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருந்ததோடு, அவ்வப்போது எடப்பாடி பழனிசாமிக்கு கடிதங்களையும் எழுதி வந்தனர்.

சி.வி.சண்முகம் வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமியைக் காட்டமாக விமர்சித்து வந்தார்.

எடப்பாடி - எஸ்.பி வேலுமணி - சிவி சண்முகம்

இந்தச் சூழலில் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இந்த விவகாரம் கொஞ்சம் அடங்கியது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி அ.தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட பிறகு மீண்டும் களத்தில் இறங்கியது வேலுமணி டீம். அ.தி.மு.க எம்.எல்.ஏக்களோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.ஆனால், சில நாள்கள் கழித்து அ.தி.மு.க எங்கள் இயக்கம். அதை விட்டு நாங்கள் செல்லமாட்டோம், எங்கள் பக்கமும் தவறு இருக்கலாம் என வேலுமணியும் சண்முகம் கொஞ்சம் இறங்கி வந்து கருத்துத் தெரிவித்தனர். ஆனால் அப்போதே சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் நூறு பேரை கட்சியிலிருந்து நீக்கியதோடு, சமீபத்தில் வேலுமணியின் ஆதரவாளர்கள்பலரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். ஆனால், இன்னும் சில நாள்களில் அவர்கள் இருவரையுமே கட்சியை விட்டே நீக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து விபரமறிந்த வட்டாரத்தில் பேசும்போது,

எஸ்.பி வேலுமணி - சி.வி சண்முகம்
எஸ்.பி வேலுமணி - சி.வி சண்முகம்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.