``என் கணவர் பழி போடுறவறா இருக்கக் கூடாது; அவருக்கு சமைக்கத் தெரிஞ்சிருந்தா... - நடிகை சாய் பல்லவி
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் - தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான ‘கே.ஜி.எஃப்’ புகழ் யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் மற்றும் ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடித்துள்ளனர்.
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர், இந்தியாவின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருபெரும் உலகளாவிய ஆளுமைகள் இணைந்து இப்படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கிறார்கள்.
அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி படமாக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக உருவாகியிருக்கும் இதில், நடிகை சாய் பல்லவி உள்ளிட்ட ராமாயணப் படக்குழுவினர் சிலர் பங்கேற்றிருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் ஒரு வீடியோவில் அமிதாப் பச்சன் சாய் பல்லவியிடம் வருங்காலக் கணவர் குறித்து எதிர்பார்ப்பு என்ன? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நடிகை சாய் பல்லவி, ``முதலில் அவர் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும். அதிக சுயநலம் கொண்டவராக இருக்கக் கூடாது. சுயபரிசோதனை செய்துகொள்பவராகவும், தனது செயல்களை சரியாக ஆராய்பவராகவும் இருக்க வேண்டும். அதாவது தான் வாழ்க்கையில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைப் பற்றிய புரிதல் அவரிடம் இருக்க வேண்டும். அவர் தவறுகள் செய்யலாம், ஆனால் அதைத் திருத்திக்கொள்ளவும் வேண்டும். தனது தவறுகளுக்காக மற்றவர்கள் மீது பழிப் போடுபவராக அவர் இருக்கக் கூடாது. எனக்கு மிகப்பெரிய பட்டியல் எதுவும் இல்லை, ஆனால் அவர் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும். அதோடு சமைக்கவும் தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்" என்றார்.

மற்றொரு புரோமோ வீடியோவில் ராமாயணா படத்தில் சீதாவாக நடிக்க முதன்முறையாக வாய்ப்பு வந்த நிகழ்வு குறித்து பகிர்ந்திருக்கிறார். அதில், ``ஒவ்வொரு முறையும் நான் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, இந்த கதாபாத்திரத்திற்கு என்னால் என்ன கொடுக்க முடியும்? என்று யோசிப்பேன். ஆனால், முதன்முறையாக சீதா மா போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் எனக்கு என்ன கிடைக்கும்? இதிலிருந்து எனக்கு என்ன அறிவும், அனுபவமும் கிடைக்கும்? என்று யோசித்தேன். அதனால் இந்தப் பயணத்தை வெளிப்படையாக வைத்திருக்க விரும்பினேன். எதைப் பற்றியும் சிந்திக்காமல், சீதா மாவை வேண்டிவிட்டு அப்படியே முன்னேறிச் சென்றேன்" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

