படுபாதாளத்திற்கு செல்லும் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவால் முதலீட்டாளர்கள் அச்சம்..

 

 

இந்திய பங்குச்சந்தைகளான நிஃப்டி  மற்றும் சென்செக்ஸ்  இன்றைய வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளன. வர்த்தகத்தின் தொடக்கத்தில் நிஃப்டி 240புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்து 22,518.00 புள்ளி அளவிலும், சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 73,663.44 புள்ளி அளவிலும் வர்த்தகமாகின. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.02 ஆகத் தொடங்கியது.

 

சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஹவுதி  அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறியதை அடுத்து, உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தால் பிரெண்ட்  கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 115 டாலராக உயர்ந்துள்ளது.

 

இந்தியப் பங்குச்சந்தைகளின் இந்த வீழ்ச்சி குறித்துப் பொருளாதார வல்லுநர் சஞ்சிதா முகர்ஜி கூறுகையில், "எண்ணெய் விலைக் குறைவு, ரூபாயின் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேசச் சூழல் சீரடைவது ஆகியவைதான் சந்தையின் மீட்சிக்கு உதவும். இந்தியா தனது கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு லாப வளர்ச்சியைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வரும் இரண்டு காலாண்டுகள் இதற்கு மிகவும் முக்கியமானவை" என்று தெரிவித்துள்ளார். மேலும், உலகளவில் AI துறை மீதான முதலீடுகள் அழுத்தத்தைச் சந்தித்து வரும் வேளையில், இந்தியாவின் சந்தை உள்நாட்டுப் நுகர்வு மற்றும் உள்கட்டமைப்பைச் சார்ந்துள்ளதால் நடுத்தரக் காலத்தில் வலுவான வாய்ப்பைக் கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.