வைபவ் நடிக்கும் ‘மணிகண்டா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: மாஸாக வெளியிட்ட நடிகர் ஜெயம் ரவி!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான வைபவ் (Vaibhav) கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. தந்திரா ஃபிலிம்ஸ் (Tantra Films) சார்பில் ஜே.கே. சரவணா தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ‘மணிகண்டா’ (Manikanda) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். விஷ்ணு சசி சங்கர் இயக்கும் இத்திரைப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். மேலும், முக்கியக் கதாபாத்திரத்தில் அரவிந்த் ஆகாஷ் நடிக்கிறார்.
View this post on Instagram
பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu) இப்படத்திற்கு க்ரியேட்டிவ் புரொட்யூசராக (Creative Producer) பணியாற்றும் நிலையில், பிரேம்ஜி அமரன் (Premgi) இசையமைக்கிறார். வெங்கட் பிரபு குழுவினரின் கலகலப்பான கூட்டணியில் உருவாகும் ‘மணிகண்டா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


