Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கு மீசை... வைரல் போட்டோ... இப்படியும் நடக்குமா?
Doctor Vikatan: பிறந்த குழந்தை ஒன்றுக்கு அடர்த்தியான, கறுப்பான மீசை இருப்பது போன்ற போட்டோ சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக வைரலாகி வருகிறது.
அது உண்மைதான் எனச் சிலரும், ஏஐ-யில் உருவாக்கப்பட்டது எனச் சிலரும் விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பிறந்த குழந்தைக்கு இப்படி மீசை இருக்க வாய்ப்பு உண்டா...?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
நீங்கள் குறிப்பிட்ட அந்த வைரல் போட்டோவின் பின்னணியில் மருத்துவரீதியான காரணம் இருக்க வாய்ப்பு உண்டு. அதாவது கன்ஜெனிட்டல் ஹைப்பர்ட்ரைகோசிஸ் (Congenital hypertrichosis) போன்ற சில மருத்துவ நிலைகளில் இப்படி ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
ஹைப்பர்ட்ரைகோசிஸ் என்பது உடலின் பொதுவான பகுதிகளில் அளவுக்கு அதிகமாக முடி வளரும் நிலையைக் குறிப்பது. தாய்வழியில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் (maternal hormones) காரணமாக இப்படி வரலாம்.
கர்ப்பக் காலத்தில் தாய் உட்கொண்ட மருந்துகள் அல்லது தாய் எதிர்கொண்ட வெளிப்புறப் பாதிப்புகளின் (maternal drug exposures) காரணமாகவும் இப்படி வரலாம். இது எந்தப் பாலினத்தவருக்கும் ஏற்படக்கூடியது.
மரபியல் ரீதியாக, பரம்பரை (genetics) காரணமாகவும் வர வாய்ப்புள்ளது. அல்லது, பலரும் சொல்கிறபடி இது வெறுமனே ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) படமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே, இது உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை என ஒரேயடியாகப் புறக்கணித்துவிடவும் முடியாது.
உடல் முழுவதும் பூனை முடி (vellus hair) போல மூடியிருக்கும் ஹைப்பர்ட்ரைகோசிஸ் பாதிப்பு இந்தக் குழந்தைக்கு இருந்திருக்கலாம். ஆனால், அடர்த்தியான மீசை (thick mustache) போன்ற முடி வளர்ச்சி ஏற்படுவது மிகவும் அரிதான ஒன்று.
டாக்டர் பூர்ணிமா:
சென்னை அண்ணாநகரில் Dr. Poornimas Clinic - House of Dermatology & Aesthetics-ன் உரிமையாளர். சருமநலத் துறையில் 13 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

