வாரத்தின் முதல் நாளில் வீழ்ச்சியில் தொடங்கி உயர்வில் முடிந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் ஆறுதல்..
இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலை 72,990.04 புள்ளிகளில் தொடங்கி, காலை 11.30 மணி நிலவரப்படி 96.40 புள்ளிகள் சரிந்து 73,027.43 புள்ளிகளில் வர்த்தகமானது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35.55 புள்ளிகள் குறைந்து 22,564.45 புள்ளிகளில் வர்த்தகமானது. ஆனால் வர்த்தக முடிவில் நிப்ட்153 புள்ளிகள் உயர்ந்தும், சென்செக்ஸ் 482 புள்ளிகள் உயர்ந்தும் இருந்தது.
ஆரம்பத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகள் வீழ்ச்சியடைந்த போதிலும், வர்த்தக நேரத்தின் இடையே சற்று மீண்டு வரும் போக்கு காணப்பட்டது. துறைவாரியாகப் பார்க்கையில், நிஃப்டி பார்மா மற்றும் மெட்டல் துறைகள் ஏற்றத்தைச் சந்தித்தன. அதேநேரத்தில், பொதுத்துறை வங்கிகள், எஃப்எம்சிஜி, ஐடி மற்றும் ஆட்டோத்துறை பங்குகள் அதிகளவில் சரிவைக் கண்டன. நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளில் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி வர்த்தகமாயின.
நிஃப்டி குறியீட்டுப் பங்குகளில் பிஎஸ்இ, டாக்டர் ரெட்டிஸ், ஜேஎஸ் டபிள்யூ ஸ்டீல் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா 2 முதல் 3.5 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக அமைந்தன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


