Chef Damu: என்னவொரு கைபக்குவம் என்று எத்தனையோ முறை பாராட்டியிருக்கிறீர்கள்! - திவ்யா துரைசாமி
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு இன்று காலமானார். இவருக்கு வயது 72. சமையல் கலைஞரான இவர் ஜெயா டிவி, விஜய் டிவி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் பெரியளவில் மக்களிடையே பரிச்சயமானார்.
கடந்த குக் வித் கோமாளி 7வது சீசனிலும் இவர் நடுவராக கலந்துகொண்டார். இவருடைய மறைவுக்கு, இவருடன் பயணித்த பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகையும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவருமான திவ்யா துரைசாமி, "எப்போதும் நேர்மறையான எண்ணங்களும், மகிழ்ச்சியான சுபாவமும் கொண்டவர் நீங்கள். உன்னைத் திருமணம் செய்துகொள்பவன் மிகவும் அதிர்ஷ்டசாலி... உனக்கு என்னவொரு கைபக்குவம்! என்று என்னை எத்தனையோ முறை பாராட்டியிருக்கிறீர்கள்... எப்பொழுதும் அழகான பெண் என்று அன்போடு அழைப்பீர்கள்.

சமீபத்தில் கூட என்னை உங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்தீர்கள். நான்தான் வர முடியாமல் போய்விட்டது. நான் கண்டிப்பா வந்து உங்களுடன் சிறிது நேரமாவது செலவழித்திருக்க வேண்டும். அந்த நல்வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டேனே என்று நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் அப்பா. உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் அப்பா!" எனப் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


