300…200…100! மூன்று ஃபார்மேட்… மூன்று சாதனைகள்! - யார் இந்த ஹாரி புரூக்?
டெஸ்ட், ஒருநாள், டி20 என ஒவ்வொரு வடிவத்திலும் தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று ஃபார்மேட்டிலும் ரன்களைக் குவித்து சாதனைகள் படைத்திருப்பவர் தான் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக்.
1999-ம் ஆண்டு இங்கிலாந்தின் கீக்லியில் பிறந்த ஹாரி புரூக், யார்க்ஷயர் அணியின் மூலம் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியவர் 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, தனது அதிரடியான பேட்டிங்கால் விரைவிலேயே கவனம் ஈர்த்தார்.
இன்று இங்கிலாந்து அணியின் கேப்டனாக உயர்ந்திருக்கும் புரூக், பெரிய ரன்களைக் குவிப்பதிலும் புதிய சாதனைகளைப் படைப்பதிலும் தொடர்ந்து தன்னை நிரூபித்து வருகிறார்.
டெஸ்ட் போட்டியில் முச்சதம்!
2024-ம் ஆண்டு பாகிஸ்தானின் முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 322 பந்துகளில் 317 ரன்கள் குவித்தார் ஹாரி புரூக். 310 பந்துகளில் முச்சதத்தை எட்டி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக முச்சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம்!
2026 அக்டோபர் 22-ம் தேதி, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 116 பந்துகளில் 202 ரன்கள் குவித்தார். 21 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் என விளாசிய இவர், 114 பந்துகளில் இரட்டைச் சதத்தை எட்டினார். இதன்மூலம், 117 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்திருந்த இந்திய வீரர் ஷுப்மன் கில்லின் சாதனையை முறியடித்து, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற உலகச் சாதனையைப் படைத்தார். மேலும், இங்கிலாந்துக்காக ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

டி20 சர்வதேசப் போட்டியில் சதம்!
2026-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 100 ரன்களும், இலங்கைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 114 ரன்களும் எடுத்து இரண்டு டி20 சர்வதேசச் சதங்களைப் பதிவு செய்தார். இதன்மூலம் டெஸ்டில் முச்சதம், ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம், டி20 சர்வதேசப் போட்டியில் சதம் என மூன்று வடிவங்களிலும் இந்த மைல்கற்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஹாரி புரூக். இதற்கு முன்பு மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் மட்டுமே இந்தச் சாதனையைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


