5 நாட்களில் சவரனுக்கு ரூ.4,080 குறைவு! இன்னும் குறையும் என தகவல்.. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி...
சர்வதேச பொருளாதார நிலவரங்களின் காரணமாகத் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ச்சியான இறக்கம் கண்டு வருகிறது. கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,560 என்ற உச்ச விலையில் விற்ற நிலையில், அதன்பிறகு தொடர்ந்து விலை குறையத் தொடங்கியது. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,240 வரை குறைந்தது.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.1,400 குறைந்து, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,060 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக கடந்த ஐந்து நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,080 வரை சரிந்துள்ளது நகை வாங்குவோருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் சற்றுக் குறைந்து தற்போது ஒரு கிராம் ரூ.225-க்கும், ஒரு கிலோ ரூ.2,25,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் தங்கம் விலை இப்படி அதிரடியாகக் குறைந்து வருவது நடுத்தர மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தங்கதில் முதலீடு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


