விலங்குகளிடம் காணப்படும் Shamonda வைரஸ்... மனிதரிடம் முதன்முறையாகக் கண்டறியப்பட்டதால் அதிர்ச்சி!
விலங்குகளிடம் மட்டுமே கண்டறியப்பட்டு வந்த Shamonda வைரஸ், மனிதரிடம் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பிரான்ஸின் லியோன் (Lyon) நகரில் தீவிர உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நோயாளியிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் நோயாளி அக்டோபர் தொடக்கத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது இருப்பினும், அவரது மரணத்துக்கு இந்த வைரஸ் காரணமா அல்லது அதன் தாக்கம் பங்களித்ததா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த வைரஸ் பொதுவாக விலங்குகளிடம் தான் காணப்படுகிறது.
பாதிக்கப்பட்ட விலங்குகளின் அருகே காணப்படும் Culicoides எனப்படும் சிறிய கடிக்கும் பூச்சிகள் மூலம் இது பரவியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பொதுமக்களுக்கு ஆபத்தா?
ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (ECDC) தற்போதைய மதிப்பீட்டின்படி, பொதுமக்களுக்கு ஆபத்து இருப்பதற்கான அறிகுறிகள் இதுவரை கண்டறியப்படவில்லை.
எனினும், வைரஸின் தன்மை மற்றும் பரவும் விதம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மனிதர்களிடம் இதுவரை பதிவாகாத வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

